கூட்டு விளைவுகள் 3 மற்றும் 5 பாவ முனைகளுக்கு ஒரே கிரகம் உப நட்சத்திரம்,பாகம் 20
ஒரே கிரகம் 3 மற்றும் 5 பாவ முனைகளுக்கு உப நட்சத்திரமாக வந்தால் எவ்வாறு பலன்கள் கிடைக்கும்?
3,5
-----
3 பாவ முனைக்கும் 5 ஆம் பாவ முனைக்கும் ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வந்தால், ஜாதகரை பரிணாமம் செய்யும் அறிவு,ஞாபகசக்தி,மனோ தைரியம்,கல்வியை ஏற்கும் மனச் சார்பு,நிலையான மனோநிலை,எழுத்துத் திறமை,பேச்சுவார்த்தைகள், பிரயாணங்கள்,சொந்த இடத்தை விட்டு வேறு இடங்களுக்கு செல்லுதல்,
புதிய சூழலுக்கு செல்லுதல், நரம்பு மண்டலங்கள்,ரத்த நாளங்கள், கேள்வி ஞானம் போன்ற காரகங்களை கொண்டிருக்கும்.
5 ம்பாவம் தனிச்சிறப்பான அறிவு, எதிலும் உள்ள ஈடுபாடு மற்றும் ரசனை.
3 ம் பாவம் மற்றும் 5 ம் பாவத்திற்கு ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வரின்,
மிகவும் புத்திக்கூர்மை மிக்கவராகவும், ஆழ்ந்த அறிவு மற்றும் ஞானம் பெற்றவராகவும் இருப்பார்.
தனக்கென்று இருக்கும் சிறந்த இயற்கை ஆற்றலின் மூலம் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவராகவும் எப்போதும் மகிழ்ச்சியாக, அனைவரோடும் ரசித்து பேசுபவராகவும், உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவராகவும் சுருக்கமாக சொன்னால் பிறவி மேதையாக இருப்பார்.
இந்த கிரகம் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக தொடர்பு கொண்ட பாவங்கள் 8,12 எனில் அன்பு சார்ந்த விஷயங்களில் பாதிக்கப்பட்டு சித்த பிரமை கூட பிடிக்கும்.காதல், போன்றவற்றில் அசிங்கம் அவமானம் ஏற்பட்டு மனம் மிகவும் பாதிக்கப்படும்.
இவர்கள் தற்கொலை முயற்சி செய்யும் நிலையும் இருக்கும்.
அதே நேரத்தில் இவை தொடர்பு கொண்ட பாவங்கள் 2,6,10 எனில் சிறந்த கலைத்திறன் மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவராக இருப்பார். கலைகளில் பல பட்டங்களை வெல்வார், தனது தனித்துவமான திறமையால் பலராலும் விரும்பப்படுவராக , உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நபராக இருப்பார்.
Share this post
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology