கேபிஜோதிடம் 2 ஆம்பாவம் 12 ஆம்பாவம் கூட்டுவிளைவுகள் பகுதி 20
Published on February 12, 2026|
KP Astrology
#பாவம்2_பாவம்12_கூட்டுவிளைவுகள்
2,12
-------
2 ஆம் பாவத்திற்கும் 12 ஆம் பாவ முறைகளுக்கும் ஒரேகிரகம் உபநட்சத்திரமாக வரும்பொழுது எப்படி பலன்கள் உண்டாகும்.
2 ஆம் பாவம்
கையிருப்புபணம், பேச்சு, உலோகங்கள், முகத்திலுள்ள உறுப்புகள்.
12 ஆம் பாவம் முதலீடு, விரயம், ரகசியம், வெளியே சொல்ல முடியாத விஷயங்கள், வட்டில் தொழில், பினாமி சொத்துக்கள்,தாழ்வுமனப்பான்மை.
எனவே ஜாதகர் தன்னிடம் உள்ள பணத்தை எப்போதும் எதிலாவது முதலீடு செய்வார். இதனால் தேவையான சமயத்தில் அதை பணமாக மாற்ற முடியாத நிலையில் தனது கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்.
முதலீடுகள் அவருக்கு பயன்படாது, அவருக்கு பிறகு அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தான் பயன்படும்.
வட்டில் தொழில் செய்யும் போது ஏமாற்றப்பட்டாலும் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருப்பார். பணத்திற்கு தேவையான உத்திரவாதம் அளிக்கும்படி எதையும் பெறாமல் பணத்தை ரகசியமாக அதிக வட்டிக்கு தருவதால் அசலுக்கு எந்த அத்தாட்சியும் இருக்காது. இவரின் முதலீடுகள் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும்.
12 ம் பாவம் சுயசிந்தனை அற்றபாவம் என்பதால், பணத்தை யோசிக்காமல் முதலீடு செய்துவிடுவதால், பல நேரங்களில் தவறாக பணம்விரயம் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இவரின் பேச்சு ரகசியங்கள் நிறைந்ததாக இருக்கும். பேச்சில் தாழ்வு மனப்பான்மை வெளிப்படும்.
அதாவது தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் வாயிலாக
8 மற்றும் 12 பாவங்களைத் தொடர்பு கொண்டால் மிகவும்மோசமாக 2 ஆம் பாவ அகம் மற்றும் புறம், இணைந்து உறுப்புகள் மற்றும் பண முதலீடுகள், நகைகள் இவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோல் 2,4,6,10 பாவங்களைத் தொடர்பு கொண்டால் இதன் புறக் காரகங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
3,7,11 பாவங்களைத் தொடர்பு கொண்டால் அகம் சார்ந்த விஷயங்களில் சிறப்பாக இருக்கும். எந்த முதலீடும் செய்யாமல் கையில் பணம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தேவையானதை வாங்கி அனுபவிப்பார்.
5 மற்றும் 9 பாவங்களைத் தொடர்பு செய்தால் பணத்தைப்பற்றிய புற அறிவு சுத்தமாக இருக்காது.
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology