கூட்டுவிளைவுகள் 17 2 மற்றும் 4 ஆம்பாவங்கள் கேபிஜோதிடம்
Published on September 8, 2025|
KP Astrology
2 மற்றும் 4 ஆம் பாவ முனைகளுக்கு ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வந்தால்,இரண்டாம் பாவமுனையின் உப நட்சத்திரம் 4 ஆம் பாவத்திற்கும் உப நட்சத்திரமாக வரும்பொழுது இரண்டாம் பாவம் என்பது பரிணாமம் எடுக்கிறது. இரண்டாம் பாவம் பணம் என்றால் 4 ம்பாவம் அதிகப்படியான பணத்தின் பரிணாமம் சொத்துக்கள்.
இந்த நிலையில் இரண்டு பாவங்களையும் ஒரே கிரகம் இயக்கும் பொழுது பணம் சொத்தாக மாறும் அல்லது அதிகப்படியான பணத்தை பெறும் நிலை வரும்.
பணத்தை வீடு,வாகனம், போன்றவையாக மாற்றும் அமைப்பு வரும்.
இந்த 2,4 பாவத்திற்கு உப நட்சத்திரமாக வந்த கிரகம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் வாயிலாக 8,12 பாவங்களைத் தொடர்பு பெற்றால், சொத்தாக,வீடாக மாற்றுவதில் பெரிய பெரிய சட்ட சிக்கல்கள், ஏமாற்றங்கள், துரோகம், இவைகளால் கடைசிவரை வீடு போராட்டம் என்பதே வாழ்க்கையாகும்.
அதேபோல தொடர்பு 3 ம் பாவம் எனில் பெரிய அளவில் பணம் இல்லாமல் சிறுக சிறுக வரும்.
நிலையான வீடு அமைவதில் பிரட்சனை இருக்கும்.அதேசமயத்தில் வாங்கும் வீடு இடப்பற்றாக்குறை அதாவது சிறிய மற்றும் அடுக்குமாடி வீடு அமையும்.
3,8,12 பாவங்களையோ தொடர்பு கொண்டால் சொத்துக்களும் இல்லை, வருமானமும் இருக்காது.
2,4 பாவங்களின் உப நட்சத்திரம் 2,4,6,10 பாவங்களைத் தொடர்பு பெற்றால் இவர் கட்டிடங்கள் கட்டும் பெரிய தொழில் நடத்துவார்.
2,4 பாவங்களின் உப நட்சத்திரம் 3,11பாவங்களைத் தொடர்பு பெற்றால் இவர் கட்டிடங்கள் கட்டும் பெரிய தொழிலில் ஈடுபட முடியாது.
மாறாக ஒரு சிறிய வீடு, ஒரு சிறிய வாகனம் போராடி வாங்கினாலும் நிறைய விரயங்களை சந்திப்பார்.
மேற்கண்ட விஷயத்தில் கடனும் வரும். முக்கியமாக அந்த வீட்டில் தங்காமல் தூரத்தில் இருப்பார்.
2,4 பாவங்களின் உப நட்சத்திரம் 8,12 அல்லது 3,8,12 பாவங்களைத் தொடர்பு பெற்றால் இவர் கட்டிடங்கள் கட்டும் பெரிய தொழில் நடத்துதல் , அல்லது பெரிய வீடு வாங்க பணம் போடுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றை தவிர்க்க முடியாமல் பணம் நட்டமடைவதும் , இதனால் கடனாளி ஆவதும் தவிர்க்க முடியாமல் போகும்.
அதாவது பணம் என்பதை சொத்துக்கள் மூலம் நிச்சயமாக இழப்பார். இது முக்கியமாக இந்த கிரக தசை புக்திகளில் நடக்கும்.
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology