கேபிஉயர்கணிதசாரஜோதிடம் கூட்டுவிளைவுகள் பாகம் 18 2 மற்றும் 6 ஆம்பாஉபநட்சத்திரம்
Published on September 21, 2025|
KP Astrology
#2ஆம்பாவம்_6ஆம்பாவம்_கூட்டுவிளைவுகள்
2 ஆம் பாவம் மற்றும் 6 ம் பாவத்திற்கு ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வந்தால் எவ்வாறு பலன்களைத் தரும்?
2 ம் பாவத்திற்கும் 6 ம் பாவத்திற்கும் ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வந்தால், 2 ம் பாவ காரகங்களான கண், பல், முகம் போன்றவற்றில் ஏதேனும் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும்.பேச்சில் மிகவும் ஆளுமைத்திறன் நிறைந்தவராக இருப்பார். அதாவது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நேரடியாக பயமின்றி ஆளுமையுடன் பேசுவார். பிறரை தனது பேச்சின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்பார்.
அதாவது பிறருக்கு ஆணை இடும்
நிலையில் பேச்சுகள் இருக்கும்.
ஏதோ ஒரே வேலை மூலமாக நிச்சயமாக வருமானம் வரும்.
நல்ல இரட்டைப்படை பாவங்கள் எனில் சொத்துக்கள், வாடகை வரும் நிலையில் இருக்கும்,6ஆம் பாவம் 2 ம் பாவத்தை தொடர்பு கொள்வதால் அடிமை வேலைகள் மற்றும் ஆளுமை உள்ள பிறருக்கு ஆணையிடும் வேலைகள், மருத்துவம், வழக்கறிஞர், உணவு , உடை போன்ற பணிகளின் மூலமாக நிலையான வருவாய் வரும்.
அதே சமயத்தில் 8,12 பாவங்களைத் தொடர்பு கொண்டால், 2 பாவத்தில் உள்ள அகம் மற்றும் பொருளாதாரம் இரண்டும் பாதிக்கப்படுவதோடு, அவர் பேசும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்கவே முடியாது.
அவரின் பேச்சுக்கள் அவருக்கு தீராத பிரச்சனைகளைத் தருவதோடு, மற்றவர்கள் பேசவே பயப்படும் நிலை வரும்.
2,6 பாவங்கள் உணவு பாதைகள் என்பதால் தவறான உணவு பழக்கம் உதாரணமாக குடிப்பழக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது உணவில் சரியான கவனம் இல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல், சரியான முறையில் ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமலும் இருக்கலாம்.
இவர்களுக்கு ஏதேனும் தீராத நோய்கள், வயிற்றில் தீராத பிரச்சனைகள் இருக்கும்.
அடிமட்ட பணிகளில் ஈடுபட்டு சரியான சம்பளம் இல்லாமல் கடனில் கஷ்டப்படுவார்கள்.
பணமும் , பணியும் எப்போதும் தீராத பெரிய பிரச்சனையாகவே இருக்கும்.
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology