கூட்டு விளைவுகள் 1 மற்றும் 5 ம் பாவம் உப நட்சத்திரம்
Published on December 1, 2024|
KP Astrology
#கூட்டுவிளைவுகள்
#உபநட்சத்திரம்
1,5 பாவ முனைகளுக்கு ஒரே கிரகம் உப நட்சத்திரம்
-----------------------------------------------------------------
1 ஆம்பாவத்திற்கு உபநட்சத்திரமாக வந்த கிரகமே, ஐந்தாம்பாவத்திற்கும் உபநட்சத்திரமாகவந்தால், இயல்பாகவே இவர் ரசனை மிக்கவர்.கலைகளில் சிறந்த ஞானத்தை இயற்கையாகவே பெற்றிருப்பார். விளையாட்டு, ஆடல் ,பாடல் ,கவிதை, ஜோதிடம் அரசியல் ஓவியம் போன்ற, கலை, கலைத்துறை சார்ந்தவிஷயங்களில்,
கற்பனைகள் சார்ந்த விஷயங்களிலும்,
ரசனையோடு இயல்பாகவே ஈடுபாடு இருக்கும்.அதாவது உணர்வுசம்பந்தப்பட்ட, எதற்கும் கட்டுப்படாத இயற்கை தோன்றும் உணர்வுகளை கொண்டிருப்பார்.
இந்த மாதிரி ஏதேனும் ஒருதுறையில் அவருக்கு passion என்று சொல்லும் ஈர்ப்பு இருக்கும். அதேபோல இந்ததுறைகளில் விரும்பிச்செய்யும் கலைஞராகவும், அந்த குறிப்பிட்ட துறையில் இயல்பான அறிவுடன் , இளம் வயதிலேயே பிறருக்கு சொல்லித்தருமளவிற்கு ஆசிரியராகும் திறமையும்,
உதாரணமாக, இந்த கிரகம் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக தொடர்புகள் 2,4,6,10 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டால்,இளம் வயதிலேயே ஜோதிடஆசிரியர்,நடனஆசிரியர், நடனஇயக்குனர்,சினிமா இயக்குனர், கலைகளுக்குப் பயிற்சிகொடுப்பவர், பங்கு சந்தை மகிழ்விக்கும் கலைஞனாகவும் மற்றும் இந்த துறையில் சாதனையாளராகவும் இருப்பதற்கு மிகவும்வாய்ப்பு இருக்கின்றது.
இம்மாதிரி அவரின் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவகையில் இருக்கும்.நல்ல கற்பனை ஓட்டத்துடன் பிறவிமேதைபோல இயல்பாகவே வெளிப்படுத்தும் கலைத்திறமைகளைக் கொண்டிருப்பார். இவரின் ஈடுபாடு அவருக்கு இன்பமும், அவரின்கலைத் திறனால் சமூகத்தில் உள்வர்களுக்கு மகிழ்ச்சியும் இயற்கையாகவே அமையும்.
இந்த கிரகம் தான்நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக அகம்சார்ந்த மற்றும் புறம்சார்ந்த பாவங்களைத் தொடர்புகொள்ளும்போது பலன்கள் அகத்திலும் புறத்திலும் வித்தியாசப்படும். அதாவது பலன்கள் இரண்டிலும், கூடவோகுறையவோ செய்யும்.
அதேசமயத்தில், இந்தகிரகம் தான் நின்றநட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக 8, 12 பாவங்களைத் தொடர்புபெரின், ஐந்தாம்பாவகம் பாதிக்கப்படும்,இதேகலைகளில் தனது மரியாதையை இழப்பார். காதல்சார்ந்தவிஷயங்களில், அன்புசார்ந்த விஷயங்களிலும், குழந்தைகள் சார்ந்த விஷயங்களிலும் லக்னமே நேரிடையாகபாதிக்கப்படுவதால், இது தொடர்பாக அவருக்குப் பல வலிவேதனைகள் அதிகமாக ஏற்படும்.நன்றிகள்
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology