Back to Blog

கூட்டு விளைவுகள்-17|7,6 மற்றும் 7,8 பாவ முனைகள் | ஒரே கிரகம் உப நட்சத்திரம்

Published on November 1, 2024|
KP Astrology
7,6 பாவ முறைகளுக்கு ஒரே கிரகம் உப நட்சத்திரம் எனில் ---------------------------------------------------------------- முரண்பட்ட பாவங்களில் எதிரெதிரான பாகங்களுக்கு ஒரே கிரகமாக நட்சத்திரமாக இருந்தால் அந்த குறிப்பிட்ட பாவத்தின் 12 ஆம் பாவமே வலிமை பெறும். ஜாதகருக்கு விரைவில் திருமணம் நடகாமல் காலதாமதம் ஆகலாம். அதேபோல ஜாதகர் மனைவியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அவரின் அடக்கியாளும் தன்மை எதிர்பாலரினருக்கு ஒரு எரிச்சலைத் தரும். ஜாதகர் அனைவரோடும் சமநிலையோடு பழக மாட்டார். ஜாதகர் மனைவியோடும், தொழில் கூட்டாளிகளோடும் அக்கறையற்ற போக்குடன் நடந்து கொள்வார. ஜாதகர் பிறர் மீது வழக்கு தொடுத்தல், அதேபோல பிறர் இவர் மீது வழக்கு தொடுத்தல் இரண்டும் நடக்கும். எந்த விஷயத்திலும் அவருடைய செயல்கள் மற்றும் கட்டளைகள் சாசனமாக இருக்கும்.திருமண வாழ்க்கை முறிவு ஏற்பட்டு இரண்டாம் திருமணம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. உடலின் சமநிலை பாதிக்கப்படும்.7 ம் பாவம் என்பது உடலின் சமநிலை கர்ப்பப்பை போன்ற அகம் சார்ந்த உறுப்புகளில், மருந்துகளால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் வரும். தான் பழகும் மனிதர்களுடன் மகிழ்ச்சிகரமான அல்லது சுமூகமான நல்லுறவுகளை எப்போதும் வைத்துக் கொள்ள மாட்டார். அடக்குமுறையால் எதிரிகள் பெற்றிருப்பார். ஜாதகரே திருமணத்தை நிராகரிப்பார்.தொழிலில் ஜாதகர் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். மக்கள் தொடர்புக்கு காரணமான 7 ம் பாவம் சமநிலை என்று இருந்தாலும், தனித்துவம் வாய்ந்த பொருட்களையே ஜாதகர் வைத்திருப்பார். எனவே அவரின் தொழில் குறிப்பிட்ட சாராரைச் சார்ந்தே இருக்கும்.தொழிலில் மோனோ போலி என்று அமைப்பில் தொழில் இருக்கும். ஜாதகர் மக்களின் மத்தியில் ஒரு வெற்றியாளராகவே இருப்பார். நடக்கும் தசையில் 6 ம் பாவத்தின் 8,12 பாவங்களான 1,5 பாவங்களின் தொடர்பு ஏற்பட்டாலும், நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக தொடர்பு கொண்ட பாவங்கள் 1,5'என்றாலும் 6 ம் பாவத்தின் வலிமை குன்றும். அதேபோல தசையில் 6,8,10,12 பாவத்தொடர்புகள் காட்டினாலும், 6,7 பாவங்களுக்கு ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வந்திருக்கும்போது, இவர்களுக்கு எளிதில் திருமணத்தில் பிரிவு வர வாய்ப்பு உள்ளது. அதேபோல 8,12 பாவங்கள் தொடர்பு பெற்றால் ஏழாம் பாவ கிட்னி பாதிப்பு மற்றும், 6 ம் பாவ வயிறு,குடல் போன்ற உறுப்புகளில் உணவுகள் எதிர்மறையாக செயல்பட்டு பிரச்சனைகள் வரும்.மேற்கண்டவற்றில் செயலிழப்பு,உறுப்பு மாற்றம், போன்ற விளைவுகளைக் கொடுக்கும். 7,8 பாவ முனைகள் ----------------------------------- 7 ம் பாவத்துக்கும்,8 ம் பாவத்திற்கும் ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வந்தால், ஜாதகருக்கு மனைவி அல்லது தான் சந்திக்கும் நபர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் மூலம் பிரச்சினைகள் இருக்கும். இவருக்கு சமுதாயம் எப்போதும் எதிர்வினையாற்றும். அதாவது சமுதாயம் இவர்களுக்கு திருட்டு பெயர் தருவது, அவதூறு வழக்கு தொடர்வது, இவர்களை ஏமாற்றுவது அல்லது இவர்கள் ஏமாறுவது, துன்புறுத்தல்,கொலை செய்யப்படுதல் அல்லது கொலையாளி பட்டம் பெற்று குற்றவாளியாக நிற்பது , பிறரிடம் நஷ்டம் அடைவது, நம்பிக்கை இழப்பது இப்படி பல விஷயங்களில் ஏதோவொரு வகையில் பிரச்சனை இருக்கும். சில சமயங்களில் எதிர்ப்பாளர்களின் செயல்கள் ஒருவித இனம் புரியாத பயத்தை கொடுக்கும். எதிர் நபர்களின் மீது எப்போதும் நம்பிக்கை குறைந்து காணப்படும். அவநம்பிக்கையாகவே அவர்களை பார்ப்பதால், கணவன் மனைவி உறவு மற்றும் தொழில் கூட்டாளிகள் போன்ற உறவுகளில் எப்போதும் ஒருவவித பிரச்சனைகளில் மற்றும் சிக்கல்கள் இருக்கும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள்,உடலில் சமநிலையில் பாதிப்புகள் இருக்கும். இந்த குறிப்பிட்ட கிரகம் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் வாயிலாக 3,7,11 பாவங்களைத் தொடர்பு கொண்டால்,அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். பெரியதாக வலிகள் வெளியில் வராமல் வழி தெரியாமல் போகும்.ஆனால் 8 ம் பாவத்திற்கு சாதகமான புத்திகள் நடந்தாலும்,நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் வாயிலாக 8,12 ம் பாவங்களைத் தொடர்பு கொண்டாலும் மேற்சொன்ன அகம் சார்ந்த உறுப்புகள் பழுதடையும்.காரணம் 7 ம் பாவத்தை இயக்கும் அதே கிரகம் 8 ம் பாவத்தையும் இயக்குவதால், வேறெந்த பாவங்களுக்கும் வரும் தீமையை விட 7 ம் பாவத்திற்கு அதிக தீமையை தரும். தொடரும்...

குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology

கூட்டு விளைவுகள்-17|7,6 மற்றும் 7,8 பாவ முனைகள் | ஒரே கிரகம் உப நட்சத்திரம் — Astrology KP Vennila