Back to Blog

கூட்டு விளைவுகள்|16|VV|6 8 பாவ முனைகள்|ஒரே உப நட்சத்திரம் வரும்போது எவ்வாறு செயல்படும்

Published on September 8, 2024|
KP Astrology
கூட்டு விளைவுகளாக பாவம் 6 மற்றும் பாவம் 8 இவற்றிற்கு ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வரும் போது எவ்வாறு செயல்படும் ?➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 6,8 பாவ முனைகள் கூட்டு விளைவுகள் --------------------------------------------------- 6 ம் பாவம் என்பது நோய், எதிரி, கடன்.8 ம் பாவம் என்பது,எதிர்பாராத வலி, வேதனை, தீராத நோய்கள்,துக்கம்,துயரச் சம்பவங்களைக் குறிக்கும் பாவமாகும். 6 ம் பாவம் 8 ம் பாவத்திற்கும் ,ஒரே கிரகம் உப நட்சத்திரமாக வருவதால், 6 ம் பாவம் மிகவும் வலிமை அடைகிறது.அதனுடைய பரிணாம பாவத்தை அதாவது வலியைத் தரும் 8 ம் பாவத்தைத் தொடர்பு கொள்வதால் மிகவும் கடினமான சங்கிலித் தொடராக அமைகிறது. இப்படிப்பட்ட ஜாதகருக்கு 6 ம் பாவத்தினுடைய அத்தனை காரகங்களும் அடுத்த பரிணாமம் எடுக்கிறது என்று பொருள்.ஆனால் வேலை அமைப்பு என்பது அடுத்த பரிணாமம் எடுப்பது என்று வைத்துக் கொள்ளாமல் வேலை என்பது ஜாதகருக்கு ஏற்படக்கூடிய நல்ல காரகம் எனவே அதில் அதிக உழைப்பை,போராடினாலும் தேவையான சன்மானம் கிடைக்காத நிலையிலும், தன்னுடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி கிடைக்காமல் தோல்வியடையும் நிலையிலும் இருக்கும். இவருக்கு மிகவும் அதிகமான ஆளுமைத்திறன்,யாருக்கும் பயப்படாத தன்மை இருக்கும். யாருக்கும் அடங்காமல் தான் சொல்லுவது நடக்க வேண்டும் என்று மிகவும் அடக்கியாளும் குணம் அதிகமாக இருக்கும். இதனால் இவரைப்பற்றி கடுமையானவர் என்ற பெயரும் பரவும். பொதுவாக இவரிடம் எளிதாக ஒரு விஷயத்தை அனுக முடியாது.இவருக்கும் வேலை கடுமையாக செய்ய நேரிடும்.காரணம் இவரும் கடுமையானவராக இருப்பார் அதேபோல இவருக்கும் ஒத்துழைப்பு கிடைக்காது. 6 ம் பாவம் மற்றும் 8 ஆம் பாவத்திற்கு ஒரே கிரகம் எனில் இதன் வலிமை மிகவும் மோசமான ஆளுமையை கொடுக்கும். எனவே வேலையில் யாரிடமும் சகஜமாக ஒத்துப்போகும் குணமிருக்காது தொடர்புகள் 5,7 பாவங்கள் வரும்போது வீரியம் குறையும். ஆனால் வேலை என்பது சரியான பொறுப்புகளை தராது உணவுகளால் ஒவ்வாமை அதாவது food poison ஏற்படும் , உணவுகள் அடிக்கடி எதிர்மறை விளைவுகளைக் கொடுக்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஜாதகருக்கு அடிக்கடி இருந்துகொண்டே இருக்கும் .6_8 என்ற சங்கிலித்தொடர் நோய்,கடன்,எதிரி போன்றவைகளை அதிகப்படுத்தும்.இதன் வீரியத்தை குறைக்க இந்த கிரகம் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் வாயிலாக தொடர்பு கொண்ட பாவங்கள் 5,7, அல்லது பல கிரகங்களின் தொடர்பு 5,7 பாவங்கள் எனில் இதனுடைய வீரியம் வெகுவாக குறைக்கப்படும். அதேபோல 6,8 பாவங்கள் 8,12 பாவங்களைத் தொடர்பு கொண்டால் இதன் பாதிப்பு மிகவும் மோசமானதாக அமையும். வேலை விபத்து மரணம், எந்த மருந்துக்கும் கட்டுப்படாத தீர்க்க முடியாத நோய், கடுமையான அடிமட்ட உழைப்பு, தவறான உணவு முறைகள், குடிப்பழக்கம், ஆகியவற்றுடன் உணவு,உடை மற்றும் இருப்பிடம் இவற்றில் எதையுமே அனுபவிக்க முடியாது. 6 ம் பாவம் அதன் பரிணாம பாவமான 8 ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் போது அதன் கெட்ட காரகங்கள் அனைத்தும் இரட்டிப்பு அடையும். அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology

கூட்டு விளைவுகள்|16|VV|6 8 பாவ முனைகள்|ஒரே உப நட்சத்திரம் வரும்போது எவ்வாறு செயல்படும் — Astrology KP Vennila