குரு சுக்கிரன் இரண்டு மாறுபட்ட கிரகங்களிள் காரக வேறுபாடுகள்
Published on March 1, 2024|
KP Astrology
குரு_சுக்கிரன்_2 நல்ல தொடர்பு பெற்று மாறுபடும் காரக விளக்கங்கள்_2
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
குரு-சுக்கிரன் 4,8,12 இல்லாத தொடர்பு அதாவது லக்னத்தினைக் கெடுக்காத பாவங்களைத் தொடர்பு கொண்டால்....
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➡️குரு - ஆண்மை, மற்றும் மேன்மைத்தன்மை
🔸சுக்கிரன் - பெண்மை மற்றும் மென்மைத்தன்மை.
➡️குரு - குறள் கூறும் அறம் பொருள் இன்பம் இவற்றில் , முதலாம் நிலையான அறம் மட்டுமே வீடுபேறு அடைய வழி என்ற சித்தாந்தக்கொள்கை.
🔸சுக்கிரன் - அறம் பொருள் இன்பம் இவற்றில் , பொருள், இன்பம் முழுமையடைவதே வாழ்க்கையின் முழுமை என்ற கிட்டத்தட்ட வேதாந்தக் கொள்கை.
(கிட்டத்தட்ட ஓசோ இந்தக் கொள்கைகளின் பால் வருபவர்).
➡️குரு - சமூகம், மதம், பரம்பரை வழிபாடு, தீர்க்கமான கொள்கைகள் என்று எது இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாதவர், பிறரிடம் அதை பெருமைப் பட சொல்லாதவர்.
🔸சுக்கிரன் - மேற்கண்ட எதையுமே தீவிரமாக சிந்தனையில் கொள்ளாதவர். மாறாக இயல், இசை , நாடகம் போன்றவற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடமை , அனுபவிக்கக் கூடியவர்.
➡️குரு - தனது கருத்துக்களை பிறர் மீது திணிக்காதவர். வாக்கு வாதத்தில் எப்போதும் ஈடுபடாதவர்.
🔸சுக்கிரன் - மேற்கண்ட விஷயங்களையற்றி ஆர்வம் இல்லாதவர்.மாறாக மனதை இசையாக , வாழ்க்கையை ஓவியமாக வைத்துக் கொள்பவர்.
வாக்கு வாதம் அகராதியிலேயே இல்லை.
➡️குரு- மிகவும் பழமையான கொள்கைகளால் வயது அதிகமான தோற்றம்.
🔸சுக்கிரன் - ரசனையுடன் இருப்பதால் மிகவும் இளமையான , கவரும் தோற்றம்.
➡️குரு - தனது கொள்கையில் ஆழமான நம்பிக்கையும் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்.
🔸சுக்கிரன் - கொள்கைகள் என்பது எதிலும் தீவிரமாக இருக்காது. மனது மகிழும், லயிக்கும் விஷயம் எதுவோ அதில் அதிக ஈர்ப்பு இருக்கும்.
➡️குரு -பிறர் கருத்தை மதிப்பவர்.
தனது கருத்துக்களை திணிக்காதவர்.
🔸சுக்கிரன் - எவருயுடைய கருத்துக்களையும் மிகவும் ஆழமாக யோசித்து , நேரத்தை இறுக்கமாக மாற்றாதவர். எதையுமே லேசாக எடுத்துக் கொள்பவர்.
➡️குரு - தன்னை பிறர் புகழ்வதை விரும்பாதவர்.
🔸சுக்கிரன்- தன்னை ரசிப்பதை விரும்புபவர்.
➡️குரு - எந்நிலையிலும் தனது பணி மற்றும் தொழில் நிமித்தமாக தானாக இறங்கிப்போய்ப் பேசாதாவர். தானாகவே தேடி வருவார்கள். அதுவே இறை அம்சம்.
🔸சுக்கிரன் - மேற்கண்ட அமைப்பிற்கு சம்பந்தமே இல்லை. இவர்கள் ஒருவரிடம் பேசுவது அந்த நேரத்தை அழகாக வைக்கும் அல்லது மனது மகிழும் என்பது மட்டுமே.
➡️ குரு - அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
என்ற அறத்துப்பால் குறளுக்கு ஏற்றவாறு உள்ளவர்கள் யாரோ அவரே குருவின் தன்மைகள் கொண்டவர்.
🔸சுக்கிரன் -நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
இப்படி அனிச்சம் பூவையும் விட மென்மை கொண்டவளே!
என்ற ரசனை பெற்ற இன்பத்துப்பால் சுக்கிரன்.
இப்படி மாறுபட்ட காரகங்களைக் கொண்ட காரணத்தால் தான் இந்த இரண்டு கிரகங்களும் எதிரெதிரானவை என்கிறோம்.
இப்படிப் பட்ட அமைப்பில் இரண்டு நண்பர்கள் இருந்தால், அவர்கள் ஒன்றாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது எவ்வாறு சாத்தியமாகும்?
கணவன் மனைவி எனில் , முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்டே முழுவதுமாக வாழவேண்டி இருக்கும்.
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology