குரு மற்றும் சுக்கிரன் காரக வேறுபாடுகள்
Published on December 27, 2023|
KP Astrology
குரு - சுக்கிரன் கெடாத தொடர்பில் காரக வித்தியாசங்கள்.
குரு - சுக்கிரன்
➖➖➖➖➖➖➖
4,8,12 பாவங்களைக் தொடர்பு கொள்ளாமல் அல்லது லக்னத்திற்கு சாதகமான பாவங்களைக் தொடர்பு கொண்டால்...
தேவ குரு மற்றும் அசுர குரு என்ற சுக்கிரன் இவர்களின் மாறுபட்ட குணங்களுக்கு ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.
இருவரும் ஒருவருக்கு நன்மைகளை வாரி வழங்குவதில் சளைத்தவர்கள் அல்ல.
ஆனால் முற்றிலும் மாறுபட்ட காரகங்களை கொண்டுள்ளன.
பொதுவாக இரண்டு கிரகங்களின் காரகங்களின் தன்மைகளால் தான் இவற்றை எதிர் எதிரான கிரகங்கள் அல்லது முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்ட கிரகங்கள் என்கிறோம்.
எனது சிற்றறிவுக்கு எட்டிய சில காரக மாறுபாடுகளை
இதற்கு முன்னர் 8,12 ஆவது பாவங்களை எழுதியது போல் எழுத நினைத்தேன்.
முக்கியமாக இதை குருவிற்கு செய்வதுதான் சரியான முறையாகவும்.
காரணம் பல விஷயங்களுக்கு குருவையே அளவுகோலாக நமது முன்னோர்கள் எடுத்தனர்.
அதனால் தான்..
குரு பார்த்தால் கோடி நன்மை,
குரு பெயர்ச்சி பலன்கள்,
நாடி ஜோதிடம் என்பதை குருவின் அடிப்படையில் இருந்து கவனிப்பது , பொதுவாக குரு பெயர்ச்சியாகும் இடத்தைக் கொண்டு பெரும்பாலும் பலன்களில் நன்மை தீமைகளை அளித்து வந்தனர்.
அப்படிப்பட்ட மேன்மைமிக்க குரு
நமது உயர் கணித சார ஜோதிடத்தில் நல்ல தொடர்பு பெற்று இருக்கும் பட்சத்தில் அகம் மற்றும் புறம் இரண்டிலும் எவ்வாறு கையாள்வது?
முக்கியமாக வட துருவம் மற்றும் தென் துருவம் என்று அழைக்கப்படும் குருவும் சுக்கிரனும் தங்களது காரகத்தில் எவ்வாறு மாறுபடுகிறார்கள்?
குரு- இறைவனின் நிழலடி அடைக்கலம். எனவே திருநீறு அணிந்த நெற்றி.
சுக்கிரன்- கவர்ச்சிகரமான , ரசனையும் ,
எதையும் அனுபவிப்பதும்.
குரு - பெரிய மனிதராக இருப்பார். தானாக அதை சொல்லி வெளிக்காட்டாதவர்.
சுக்கிரன் - தன்னை அழகுபடுத்தி காட்டிக்கொள்பவர். கவர்ச்சியாக தெரிபவர்.
குரு- ஆன்மீகம் , பக்தி மார்க்கம், இறைவனை பற்றிய செய்திகள் , வழிபாடுகள். தீவிரத்தன்மை இல்லாதவர்.
தான் இறைபக்தி உள்ளவர் என்ற தனது வழிபாட்டை,
பக்தியை அனைவருக்கும் தெரிபடுத்தாத, இயல்பான தன்மை.
கெடாத குரு எதையுமே சொல்லி பெருமைப்படாத காரகம்.
சுக்கிரன் - கலைகள் , ரசனை , அழகு , சினிமா என்று குருவிற்கு மாறுபட்ட கோணத்தில் முனைப்பு. வெளிப்படுத்துவதும் , அழகாக காட்டுவதும் இயல்பு.
குரு - செல்வந்தர், ஆனால் ஆடம்பரமான ஆடை அணிகலன்கள் இல்லாமல் , வெண்ணிற ஆடை அல்லது கதர் ஆடைகள் போன்ற உடைகளை அணிந்து... ரசனைகள் குறைந்தவராக தெரிவது
சுக்கிரன் - செல்வந்தர், பகட்டான ஆடைகள் , ரசிக்கும்படியான பல வண்ண உடைகள் , வைரம் , வைடூரியம் போன்ற விலையுயர்ந்த கண்ணை கவரும் ஆபரணங்களை ஆடைக்கு ஏற்றவாறு மிகவும் அழகாக அணிதல்.
குரு - பணம் எளிதாக நியாயமான முறையில் வரும். சரியாக வரிகாட்டி வைத்திருக்கும் பணம் .
ஆனால் அதை எந்த ஆடம்பரமான விஷயங்களுக்கு செலவு செய்யாமல் , பணத்தை இறைவனுக்கு மட்டுமே தாராளமாக செலவிடுவது.
சுக்கிரன் - கணக்கு இல்லாமலும் எளிதாக வரும் பணம். இந்த பணத்தில் கருப்பு பணமும் அதாவது முழுவதும் வரி கட்டப்பட்ட பணம் என்றில்லாமல் இருக்கும். இதை தாராளமாக செலவிடுவதும் , ஆடம்பரமான பொருட்கள் வாங்க பயன்படுத்துவார்கள்.
குரு - வீடு கோவில் போல கடவுள் படங்கள் நிறைந்து , பல நன்மக்கள் , கல்வியில் உயர்ந்தோர் வந்து போகும் பெரிய வீடாக..
முக்கியமாக இயற்கை தன்மையுடன் கூடிய வீடாக இருக்கும்.
சுக்கிரன் - யோசிக்கவே முடியாத அளவிற்கு கலையம்சம் நிறைந்து , நிறைய ஆடம்பரமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட,
நிறைய interior design செய்யப்பட்ட,
மாட மாளிகைகள்,
வீடு என்பதைவிட அது ஒரு ART என்றே சொல்லலாம்.
குரு - தொடர்பு கொள்ளும் மனிதர்கள் ஆன்மீகம் மற்றும் கல்வியாளர்கள். பேச்சில் கவர்ச்சி இருக்காது.
சுக்கிரன் - ஆடல் , பாடல் , கலைகள் , ரசனை நிறைந்த மனிதர்களோடு பழக்கவழக்கங்கள் இருக்கும்.
முக்கியமாக பெண்கள் சார்ந்த தொடர்புகள் அதாவது பணிகள்.
பேச்சில் கவர்ச்சி இருக்கும்.
குரு - அனைவருக்கும் அறிந்த கருவூலம் மற்றும் வங்கிகள் தொடர்பு பெற்றவர்கள்.
சுக்கிரன் - ஆடம்பரமான உடை , ஒப்பனை , அலங்காரம் , கலைத்துறை , தொடர்பு பெற்றவர்கள்
குரு - குழந்தையை உருவாக்கும்
உயிரணுக்களின் உற்பத்திக்கு காரகன்.
புத்திர காரகன்.
சுக்கிரன் - காதல் ஹார்மோன்களுக்கு காரகன்.
குரு - இறைவனுக்கு சேவை செய்வதே பிறவியின் பயன் என்ற பேரின்பம்.
சுக்கிரன் - வாழ்க்கையை அணு அணுவாக அனுபவித்து வாழவேண்டும் என்பவர்.
குரு - பணம் நிறைய வரும் ஆனால் அனுபவித்தல் என்பது இறைபணி மட்டுமே நிறைவான வழி, இறை மனம்
சுக்கிரன் - துன்பம் இல்லாத மனம் , refreshing mind , சொகுசு வாகனம் , ஆடம்பரமான வீட்டையும் கை நீட்டும் இடத்தில் பணி செய்ய ஆட்கள் , ஊரே மெச்சும் அளவில் உல்லாச வாழ்க்கை.
குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology