Back to Blog

ஜோதிடத்தில் பல பாவங்களின் கூட்டு விளைவுகள் என்றால் என்ன?

Published on December 1, 2023|
KP Astrology
#கூட்டுவிளைவுகள்_கேபி_ஜோதிடம் #குண_வெண்ணிலா கூட்டு விளைவுகள் என்றால் என்ன? பொதுவாக ஒரு கிரகம் ஒரு பாவமுனைக்கு உப நட்சத்திரமாக வரும்போது அகம் அல்லது புறம் சார்ந்த விஷயங்களில் .... தொடர்புகளைப் பொருத்து நன்மைகள் அல்லது தீமைகள் விளையும். அது எந்த source மூலமாக என்பது ஒரு குறிப்பிட்ட முனை மட்டுமே முடிவு செய்யும். ஆனால் அதேசமயம், ஒரு கிரகம் பல பாவ முனைகளுக்கு உப நட்சத்திரமாக வரும் போது மாறுபட்ட பாதிப்புகள் இருக்கும். முக்கியமாக முரண்பட்ட பாவ முனைகளுக்கு உப நட்சத்திரமாக ஒரு கிரகம் வரும்போது அதை கவனித்தே பலன்கள் சொல்ல வேண்டும். இதைத்தான் கூட்டு விளைவுகள் என்கிறோம். உதாரணமாக 1 ம் பாவ முனை உப நட்சத்திரம் குரு. குரு தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் வாயிலாக 2,6,10 பாவங்களைத் தொடர்பு கொண்டால் இது தனித்த விளைவு. 1,6,8 இந்த மூன்று பாவ முனைகளுக்கும் குரு உப நட்சத்திரமாக வந்து அதே 2,6,10 தொடர்பு பெறும் போது, லக்னம் மேற்கண்ட 1 குரு------- 2,6,10 தொடர்பைப் போலவே செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 1,6,8 குரு ..... இவற்றில் உள்ள பாவங்கள் விளைவாக 1~6~8 என்று தொடர்பு பெறுவதால், லக்னத்திற்கு பலன்கள் சொல்லும் போது இதன் தன்மைகளையும் இணைத்துப் பார்த்து, ஜோதிட புரிதலோடு பலன்களை எடுக்க வேண்டும். இதுவே கூட்டு விளைவுகள் என்கிறோம். 1,8 கிரகம் 1,12 கிரகம் 1,5 கிரகம் 1,9 கிரகம் 1,7,8 கிரகம் 1,6,7,8 கிரகம் 2,4,6,8,10,12 கிரகம் 1,3,5,7,9,11 கிரகம் 5,8 கிரகம் 6,12 கிரகம் 3,6,9,12 கிரகம் 4,10 கிரகம் 5,11 கிரகம் மேற்கண்டது போல பல தரப்பட்ட கூட்டு விளைவுகளை கிரகங்களின் காரகங்களோடு இணைத்து பார்த்து பலன்களை கையாள வேண்டும்.இதையே பாவங்களின் கூட்டு விளைவுகள் என்கிறோம். ஜோதிஷ ஆச்சார்யா

குண. வெண்ணிலா — KP Advanced Stellar Astrology

ஜோதிடத்தில் பல பாவங்களின் கூட்டு விளைவுகள் என்றால் என்ன? — Astrology KP Vennila